Sunday, September 25, 2016

39. திவ்ய தேச தரிசன அனுபவம் 18. திருவேளுக்கை (77)

தரிசனம் செய்த நாள் - 02/09/2016 (வெள்ளிக்கிழமை)
 தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
4. திருவேளுக்கை (77)
தனக்குரிய னாயமைந்த தானவர்கோன் கெட்டான்
உனக்குரிய னாயமைந்த னுய்ந்தான் - நினைக்குங்கால்
வேளுக்கை யாளரியே! வேறுதவி யுண்டோ?உன்
தாளுக்கா ளாகாத வர்க்கு. (77)
 - பிள்ளைப்  பெருமாள் ஐயங்காரின் 108 திருப்பதி அந்தாதி.

அஷ்டபுயகரர் கோயிலிலிருந்து விளக்கொளிப் பெருமாள் கோயில் செல்லும் வழியில், விளக்கடிக் கோயில் தெருவில் இடப்பக்கம் உள்ள ஒரு தெருவில் இருக்கிறது இந்தக் கோயில்.

ஹஸ்திசைலம் (அத்திகிரி) என்ற குகையில் இருந்த நரசிம்மர் அசுரர்களை அழித்தபின், தான் இருக்க இதுவே சரியான இடம் என்று தேர்ந்தெடுத்து அமர்ந்த இடம்தான் திருவேளுக்கை. வேள் என்றால் விருப்பம், இருக்கை என்றால் இருப்பிடம், வேள் + இருக்கை  வேளிருக்கை என்றாகிப்  பிறகு திரிந்து வேளுக்கை என்று திரிந்தது. வேள் என்றால் உயர்ந்தவர் என்றும் பொருள் உண்டு (அஹோபிலத்தைத் தமிழில் சிங்க வேள் குன்றம் என்றுதானே அழைக்கிறோம்?) எனவே உயர்ந்தவரான நரசிம்மர் இருக்கும் இடம் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

இந்த திவ்யதேசம் பற்றிய தனது "அன்று இவ்வுலகம்' என்று  துவங்கும் பாசுரத்தில், பேயாழ்வார்,
'நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் அன்று'
என்று பாடியிருப்பது முதலில் நரசிம்மர் இங்கு நின்ற கோலத்தில் காட்சி அளித்ததையும், பின்பு இருந்த காலத்துக்கு மாறியதையும்தான் குறிப்பிட்டுதான் என்று என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது.

மூலவர் - அழகிய சிங்கர், முகுந்த நாயகர், நரசிம்மர், ஆள் அரி.
மேற்கு நோக்கி இருந்த திருக்கோலத்தில் யோகநரசிம்மராகக் காட்சி அளிக்கிறார்.

பிருகு மகரிஷிக்கு கனக விமானத்தின் கீழ் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி தரிசனம் கொடுத்ததாகப் புராண வரலாறு. பிற்காலத்தில் மேற்கு நோக்கி யோக நரசிம்மராக அமர்ந்து விட்டார் போலும்! தன் விருப்பப்படி வேறு திசை நோக்கி அமர்ந்து கொண்டார் என்பதாலும் வேளிருக்கை என்ற பொருள் இவருக்குப் பொருந்தும்!

அழகியசிங்கர்

தாயார் -  அம்ருதவல்லி, வேளுக்கைவல்லி. தாயாருக்குத் தனிச் சந்நிதி உண்டு.

விமானம் - கனக விமானம் 

தீர்த்தம் - கனக சரஸ், ஹேம சரஸ்  

பிரகாரத்தில் ஆண்டாள், சக்கரத்தாழ்வாருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன. 

கோயிலில் குலோத்துங்க சோழன், ராஜாதிராஜ சோழன் ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன. காஞ்சியில் உள்ள மற்ற திவ்ய தேசங்களைப்  போலவே, இந்தக் கோயிலும் பல்லவர்களால் கட்டப்பட்டு, சோழ மற்றும் விஜயநகர மன்னர்களால் போற்றி வளர்க்கப்பட்டுள்ளது. 

இந்த திவ்ய தேசத்தை திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்திலும், பேயாழ்வார் 3 பாசுரங்களிழும் மங்களாசாசனம் செய்துள்ளனர். வேதாந்த தேசிகர் 'காமாஸிகாஷ்டகம்' என்ற ஸ்லோகத்தில் இந்தப் பெருமாள் பற்றிப் பாடி இருக்கிறார். 

ஆழ்வார் பாசுரங்களைக்  கீழே காணலாம். 

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய மடல்
2673 மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை      (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை      (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்      (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்      (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான்      (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்      (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்      (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்      (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள் 
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்      (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க   (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்     (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்     (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த     (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்     (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்     (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்     (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்     (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்     (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு     (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே     (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்     (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்             (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும் 
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வௌ¢ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
பேயாழ்வார் 
மூன்றாம் திருவந்தாதி
2306 சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும் 
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும் 
வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப்பாடியுமே 
தாம் கடவார் தண் துழாயார்             (26)

2314 அன்று இவ் உலகம் அளந்த அசைவேகொல்?
நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் அன்று
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே! காண்             (34)

2342 விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம் 
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த 
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி 
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு 62

ஓம் நமோ நாராயணாய!

Friday, September 23, 2016

38. திவ்ய தேச தரிசன அனுபவம் 17.திருத்தண்கா (76)

தரிசனம் செய்த நாள் - 02/09/2016 (வெள்ளிக்கிழமை)
 தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
3. திருத்தண்கா (76)
[பிரிந்து ஆற்றாளாய தலைவி தலைமகன் பக்கல் தனக்கு உள்ள
அன்புறுதியைத் தோழிக்குக் கூறுதல்]
ஆட்பட்டே னைம்பொறியா லாசைப்பட் டேனறிவும்
கோட்பட்டு நாணங் குறைபட்டேன் - சேட்பட்ட
வண்காவை வண்டுவரை வைத்த விளக்கொளிக்குத்
தண்காவைச் சேர்ந்தான் றனக்கு. (76)
- பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி.'

பசுமையான செடிகள் நிறைந்து குளிர்ச்சியாக இருந்ததால் இந்த இடத்தின் பெயர் திருத்தண்கா என்று வழங்கப்படுகிறது. தூய்மையான தர்ப்பைப் புற்கள் வளர்ந்த இடம் என்பதால் தூப்புல் என்றும் இந்த ஊருக்குப் பெயர் உண்டு.

தூப்புல் என்றால் நம் நினைவுக்கு வருபவர் வேதாந்த தேசிகர்தானே? வேதாந்த தேசிகரின் அவதார ஸ்தலம் இந்த ஊர்தான். அதனால்தான் வேதாந்த தேசிகருக்கென்று பெரிய சந்நிதி இந்த திவ்ய தேசத்தில் அமைந்திருக்கிறது.

அத்திகிரிஅஷ்டபுஜங்கம் ஆகிய திவ்யதேசங்களின் ஸ்தல புராணத்துடன் தொடர்புடையதுதான் இந்த திவ்ய தேசத்தின் ஸ்தலப் புராணமும்.

பிரம்மாவின் யாகத்தைத் தடுக்க சரஸ்வதி அனுப்பிய அரக்கர்கள் பலவிதங்களிலும் முயன்று யாகத்தைத் தடுக்க முயலாமல் போய், சூரிய சந்திரர்களை மறைத்து உலகை இருளில் மூழ்கடித்தனர். அப்போது விஷ்ணு பிரகாசமான ஒளியாகத்தோன்றி இருளைப் போக்கினார். அதனால் இவர் தீபப்பிரகாசர் என்றும், தமிழில் விளக்கொளிப் பெருமாள் என்றும் அழைக்கப் படுகிறார்.

தீபப்  பிரகாசர் (விளக்கொளிப் பெருமாள்)

அஷ்டபுஜம் கோயிலிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில். தீபப்பிரகாசர் உபயநாச்சியார்களுடன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.

தயார் மரகதவல்லிக்குப் பிரகாரத்தில் தனிச் சந்நிதி உள்ளது. பெருமாள் சந்நிதிக்கு அருகே ஆழ்வார் சந்நிதிகளும், பிரகாரத்தில் ஆண்டாள் சந்நிதியும் அமைந்துள்ளன.

இந்தக் கோயிலை ஒட்டியே வேதாந்த தேசிகர் சந்நிதி ஒரு தனிக்கோயில் போல் பெரிதாக அமைந்துள்ளது. வேதாந்த தேசிகர் தெற்கு நோக்கியபடி அபய ஹஸ்தத்துடன் எழுந்தருளியிருக்கிறார். அவர் ஆராதனை செய்த லக்ஷ்மி ஹயக்ரீவரின் விக்கிரகமும் இங்கு எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளது. பிரகாரத்தில் வேதாந்த தேசிகரின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது.

பல்லவர்களால் கட்டப்பட்டு, சோழர்களாலும், விஜயநகர அரசர்களாலும் போற்றிப்  பாதுகாக்கப்பட்ட கோயில் இது.

தீர்த்தம் - சரஸ்வதி தீர்த்தம். பிரம்மாவிடம் கொண்ட  கோபம் தீர்ந்த பின், தீபப்பிரகாசரின் வெப்பத்துக்கு இதமாக இருக்கும் வகையில் குளிர்ந்த தீர்த்தமாக இங்கு இருக்கிறார் சரஸ்வதி தேவி. 

விமானம் - ஸ்ரீகர விமானம்.

திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களில் இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார். 

இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
பதினெண் திருப்பதிகள்   
1848 பொன்னை மா மணியை அணி ஆர்ந்தது ஓர்
மின்னை வேங்கடத்து உச்சியில் கண்டு போய்
என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்-
தன்னை யாம் சென்று காண்டும்-தண்காவிலே            (2)

 இரண்டாம் ஆயிரம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி
திரு நெடுந்தாண்டகம்
2064 முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா
      மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய
      அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில் 

Wednesday, September 21, 2016

37. திவ்ய தேச தரிசன அனுபவம் 16 அஷ்டபுயங்கம் (75)

தரிசனம் செய்த நாள் - 02/09/2016 (வெள்ளிக்கிழமை)
 தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
2. திருவட்டபுயங்கம் (75)
என்றுத் துயருழக்கு மேழைகாள்! நீங்களிளங்
கன்றுபோற் றுள்ளிக் களித்திரர் - அன்றுநடம்
இட்ட புயங்கத் திருசரண மேசரணென்
தட்டபுயங் கததர்க்கா ளாய். (75)
- பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி.'
பொருள்: எப்போதும் துயரில் ஆழ்ந்திருப்போரே! அன்று புஜங்க நடனம் (புஜங்கம் என்றால் பாம்பு. காளிங்கன் மீது கண்ணன் புரிந்த நடனம்) புரிந்த கண்ணனைச் சரணடைந்து, அஷ்டபுஜங்கப் பெருமாளுக்கு உங்களை ஆட்படுத்திக் கொண்டால் , நீங்கள் கவலைகள்  ஏதுமின்றி இளங்கன்று போல் துள்ளி மகிழலாம்.

எட்டு கைகளுடன் பெருமாள் எழுந்தருளியிருப்பதால், சம்ஸ்கிருதத்தில் அஷ்டபுஜம் (எட்டு கைகள்) என்ற பெயர் மருவி, அஷ்டபுஜங்கம், அஷ்டபுஜகரம், அட்டபுயங்கம், அட்டபுயங்கரம் என்று பலவாறாக வழங்கப் படுகிறது.

அத்திகிரி பற்றிய பதிவில்  குறிப்பிட்டபடி பிரம்மாவின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி அனுப்பிய அரக்கர்களை அழிக்கப் பெருமாள் 8 கைகளிலும் ஆயுதம் ஏந்தி நிற்கிறார். பொதுவாக நான்கு கைகளுடன் விளங்கும் விஷ்ணு (விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 'நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்புஜம்' என்று வரும் வரியைப்  பலரும் அறிந்திருக்கக்கூடும்.), இங்கே எட்டு கைகளுடன் விளங்குவது சிறப்பு.

எல்லா அரக்கர்களும் கொல்லப்பட்ட பிறகு, சரஸ்வதி ஒரு கொடிய பாம்பை அனுப்பினார். இந்தப் பாம்பும் பெருமாளால் கொல்லப்பட்டது. இந்தப் பாம்பின் உருவம் 'சரபேஸ்வரன்' என்ற பெயரில் யாகசாலையின் வாயுமூலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கஜேந்திரனைக் காக்க எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி வந்தார் பெருமாள் என்ற இன்னொரு வரலாறும் கூறப்படுகிறது.

பெருமாள் தனது  நான்கு வலது கைகளில் சக்கரம், கத்தி, தாமரைப்பூ, அம்பு ஆகியவற்றையும், நான்கு இடது கரங்களில் சங்கு, வில், கேடயம், கதை ஆகியவற்றையும் தாங்கி நிற்கிறார். தீயவற்றை அழிக்கும் இந்த 8 ஆயுதங்களும்  'திவ்ய ஆயுத ஆழ்வார்கள்' என்று அழைக்கப்படுகின்றன. (பெருமாளுக்கு ஆயுதங்கள் தேவையில்லை. தாமரைப்பூ, சங்கு ஆகியவையும் 'ஆயுதங்கள்' என்று கூறப்படுவதிலிருந்தே, இந்த ஆயுதங்களைப் பெருமாள் ஏந்தியிருப்பது ஒரு தோற்றத்திற்காகத்தான் என்று கொள்ளலாம்.)

அஷ்டபுயகரம் - ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் 

அஷ்டபுஜப் பெருமாள் கோயில் விஷ்ணு காஞ்சியில், வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. யதோத்காரிப் பெருமாள்  கோயிலுக்கு (திருவெஃகா) எதிர்ப்புறமாக உள்ளது.

மூலவர் - ஆதிகேசப் பெருமாள், கஜேந்திர வரதர், சக்கரத்தாரர்
மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். திருமார்பில் மகாலக்ஷ்மித் தாயாருடன், சாளக்ராம மாலை அணிந்து சேவை சாதிக்கிறார் பெருமாள்.

தாயார் -  புஷ்பவல்லி, பத்மாசனி, அலர்மேல்மங்கை என்ற பெயர்களில் தனிச் சந்நிதியில் சேவை சாதிக்கிறார்.
விமானம் - ககனாக்ருதி விமானம், சக்ராக்ருதி விமானம், வியோமாகர விமானம்
புஷ்கரணி  - கஜேந்திர புஷ்கரணி

கோயிலில்ஆண்டாள், பேயாழ்வார், பூவராகர், ஆஞ்சநேயர் சந்நிதிகளும் உள்ளன.

தீர்த்த யாத்திரையின்போது அர்ஜுனன் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கும், அஷ்டபுஜகரர் கோயிலுக்கும் சென்று வழிபட்டதாக மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது.

பல்லவர்களால் கட்டப்பட்டு, சோழர்கள், விஜயநகர மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட கோயில் இது.

இந்த திவ்யதேசத்தைத் திருமங்கை ஆழ்வாரும் (11 பாசுரங்கள்), பேயாழ்வாரும் (ஒரு பாசுரம்)  மங்களாசாசனம் செய்துள்ளார்கள். வேதாந்த தேசிகர், மனவள மாமுனிகள் ஆகியோரும் இந்தப் பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

ஆழ்வார் பாசுரங்களைக் கீழே காணலாம்.

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருவட்டபுயகரம் தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி தோழி-தாயர்க்குக் கூறுதல்
1117 திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை 
      மலர்மிசைமேல் அயனும் வியப்ப 
முரி திரை மா கடல் போல் முழங்கி 
      மூவுலகும் முறையால் வணங்க 
எரி அன கேசர வாள் எயிற்றோடு 
      இரணியன் ஆகம் இரண்டு கூறா 
அரி உரு ஆம் இவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே            (1)
 
1118 வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் 
      வேதம் உரைத்து இமையோர் வணங்கும் 
செந்தமிழ் பாடுவார்-தாம் வணங்கும் 
      தேவர் இவர்கொல்? தெரிக்கமாட்டேன் 
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து 
      மாவலி வேள்வியில் மண் அளந்த 
அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே             (2)
 
1119 செம் பொன் இலங்கு வலங்கை வாளி 
      திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள் 
உம்பர் இரு சுடர் ஆழியோடு 
      கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே 
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ 
      வெண் மருப்பு ஒன்று பறித்து இருண்ட 
அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே             (3)
 
1120 மஞ்சு உயர் மா மணிக் குன்றம் ஏந்தி 
      மா மழை காத்து ஒரு மாய ஆனை 
அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் 
      ஆயர்கொல்? மாயம் அறியமாட்டேன் 
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி 
      வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து 
அம் சுடர் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே             (4)
 
1121 கலைகளும் வேதமும் நீதி நூலும் 
      கற்பமும் சொல் பொருள்-தானும் மற்றை 
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் 
      நீர்மையினால் அருள்செய்து நீண்ட 
மலைகளும் மா மணியும் மலர்மேல் 
      மங்கையும் சங்கமும் தங்குகின்ற 
அலை கடல் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே            (5)
 
1122 எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் 
      ஏதும் அறிகிலம் ஏந்திழையார் 
சங்கும் மனமும் நிறையும் எல்லாம் 
      தம்மன ஆகப் புகுந்து தாமும் 
பொங்கு கருங் கடல் பூவை காயா 
      போது அவிழ் நீலம் புனைந்த மேகம் 
அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே             (6)
 
1123 முழுசி வண்டு ஆடிய தண் துழாயின் 
      மொய்ம் மலர்க் கண்ணியும் மேனி அம் சாந்து 
இழுசிய கோலம் இருந்தவாறும் 
      எங்ஙனம் சொல்லுகேன்? ஓவி நல்லார் 
எழுதிய தாமரை அன்ன கண்ணும் 
      ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும் 
அழகியதாம் இவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தேன் என்றாரே             (7)
 
1124 மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க 
      வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை 
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் 
      சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில் 
காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார் 
      கண்ணும் வடிவும் நெடியர் ஆய் என் 
ஆவி ஒப்பார் இவர் ஆர்கொல்? என்ன-
      அட்டபுயகரத்தே என்றாரே             (8)
 
1125 தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா 
      நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு 
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி 
      வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு 
நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் 
      நான் இவர்-தம்மை அறியமாட்டேன் 
அஞ்சுவன் மற்று இவர் ஆர்கொல்? என்ன- 
      அட்டபுயகரத்தேன் என்றாரே             (9)
 
1126 மன்னவன் தொண்டையர்-கோன் வணங்கும் 
      நீள் முடி மாலை வயிரமேகன் 
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி 
      அட்டபுயகரத்து ஆதி-தன்னை 
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன் 
      காமரு சீர்க் கலிகன்றி குன்றா 
இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை 
      ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே            (10)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய மடல்
2673 மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்
மன்னி அந் நாகத்து அணைமேல் ஓர் மா மலை போல்
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை      (1)
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நிலமங்கை      (2)
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன்
என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த மழைக் கூந்தல்      (3)
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையைத்      (4)
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அம் மறை தான்      (5)
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில்
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? நான்கினிலும்      (6)
பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் வெம் சுடரோன்      (7)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில்      (8)
மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள் 
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும்      (9)
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே அது நிற்க   (10)
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிரக் கண் வானவர் கோன்
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர்     (11)
கொல் நவிலும் கோல் அரிமாத் தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங் கண்     (12)
கன்னியரால் இட்ட கவரிப் பொதி அவிழ்ந்து ஆங்கு
இன் இளம் பூந் தென்றல் இயங்க மருங்கு இருந்த     (13)
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல்
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழைத் தடங் கண்     (14)
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணித் தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த
மன்னும் பவளக் கால் செம் பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ்ப் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில்     (15)
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய்
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகைமேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழைக் கண்ணார்     (16)
பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீலச்
சின்ன நறுந் தாது சூடி ஓர் மந்தாரம்     (17)
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின்
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூந் தென்றல் புகுந்து ஈங்கு இள முலைமேல்
நல் நறும் சந்தனச் சேறு உலர்த்த தாங்கு அரும் சீர்     (18)
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலைமேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு     (19)
இன்ன உருவின் இமையாத் தடங் கண்ணார்
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல்
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே     (20)
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும்
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின்     (21)
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின்
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர்மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும்
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு அதனை யாம் தெளியோம்             (22)
மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழுஞ் சந்தனக் குழம்பின்
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் (23)
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின்
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணைமேல் (24)
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலுக்கு
உன்னி உடல் உருகி நையாதார் உம்பர்வாய்த் (25)
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவத் தளராதார் காமவேள் (26)
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணைமேல் (27)
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும்
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் (28)
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வளநாடு கைவிட்டு மாதிரங்கள் (29)
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு
கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்றுப் பேயே திரிந்து உலவா
கொல் நவிலும் வெம் கானத்தூடு கொடும் கதிரோன் (30)
துன்னு வெயில் வறுத்த வெம் பரல்மேல் பஞ்சு அடியால்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும்
அன்ன நடைய அணங்கு நடந்திலளே? (31)
பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின்
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும்
கன்னி தன் இன் உயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் (32)
கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? பூங் கங்கை (33)
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும்
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை
பன்னாகராயன் மடப் பாவை பாவை தன் (34)
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன் தன் (35)
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய்த் தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும்
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? சூழ் கடலுள் (36)
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும்
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன்
தன்னுடைய பாவை உலகத்துத் தன் ஒக்கும்
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய (37)
இன் உயிர்த் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரைத் தோள் மாயவன் பாவியேன் (38)
என்னை இது விளைத்த ஈர் இரண்டு மால் வரைத் தோள்
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்
கன்னி தன்பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர்
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் (39)
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன்?
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா (40)
மின்னும் அணி முறுவல் செவ் வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தான் தரித்து ஆங்கு
அன்ன அருந் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் (41)
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால்
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும்
தன்னின் உடனே சுழல சுழன்று ஆடும்
கொல் நவிலும் மூவிலை வேல் கூத்தன் பொடி ஆடி
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே?
பன்னி உரைக்குங்கால் பாரதம் ஆம் பாவியேற்கு (42)
என் உறு நோய் யான் உரைப்பக் கேள்மின் இரும் பொழில் சூழ்
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல்
பொன் இயலும் மாடக் கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் (43)
மன்னன் திரு மார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின்
பொன் இயல் காடு ஓர் மணிவரைமேல் பூத்ததுபோல்
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும்
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகதக் குன்றின் மருங்கே ஓர் (45)
இன் இள வஞ்சிக்கொடி ஒன்று நின்றதுதான்
அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய்
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய்
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு
மன்னு மறிகடலும் ஆர்க்கும் மதி உகுத்த (46)
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும்
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ?
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து
பின்னும் அவ் அன்றில் பெடை வாய்ச் சிறு குரலும்
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்?
கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்து பொத அணைந்து
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன்மேல் (47)
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே பேதையேன் (48)
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல்
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும்
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து (49)
பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல்
என் இவைதான் வாளா? எனக்கே பொறை ஆகி
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர்
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே? மால் விடையின் (50)
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு மாலைவாய்த் (51)
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும்
என் இதனைக் காக்குமா? சொல்ல¦ர் இது விளைத்த (52)
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் காயாவின் (53)
சின்ன நறும் பூந் திகழ் வண்ணன் வண்ணம் போல்
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்துப்
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரக் கண் (54)
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும்
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து
கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே வல்லாளன் (55)
மன்னு மணிக் குஞ்சி பற்றி வர ஈர்த்து
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய (56)
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழிப் படைத் தடக் கை வீரனை
மன்னு இவ் அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க
பின்னும் ஓர் ஏனமாய்ப் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை
மன்னும் வட மலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும்
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும் 
(57) தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர்
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி தன் (58)
பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் (59)
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணைக்கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த (60)
பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து அங்கு
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரைமேல் (61)
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர்மேல் (62)
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை
மின்னை இரு சுடரை வௌ¢ளறையுள் கல் அறைமேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ்ப் (63)
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர்க் கடல் கிடந்த தோளா மணிச் சுடரை
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர் தம் (64)
சென்னி மணிச் சுடரை தண்கால் திறல் வலியை
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் (65)
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலறப்
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் (66)
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை (67)
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழிப் படையானை கோட்டியூர் (68)
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வௌ¢ளத்தை இந்தளூர் அந்தணனை
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் (69)
உன்னிய யோகத்து உறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர் தம் (70)
முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல் (71)
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணித்
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் (72)
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள் மதியை நான் வணங்கும் (73)
கண்ணனை கண்ணபுரத்தானை தென் நறையூர்
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையைக் கண்டு ஆங்குக் கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் (74)
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும்
தன் அடியார் முன்பும் தரணி முழுது ஆளும்
கொல் நவிலும் வேல் வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் (75)
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரிக் களவின்கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் (76)
தன் வயிறு ஆர விழுங்க கொழுங் கயல் கண்
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால்
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்கண்
துன்னு சகடத்தால் புக்க பெருஞ் சோற்றை
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும்
மன்னர் பெருஞ் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய்த்
தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர் தம் கண் களிப்ப
கொல் நவிலும் கூத்தனாய் பேர்த்தும் குடம் ஆடி
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும்
தென் இலங்கையாட்டி அரக்கர் குலப் பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்றுத் (77)
துன்னு சுடு சினத்துச் சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால்
தன்னை நயந்தாளைத் தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும்
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா (78)
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் (79)
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான்
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் (80)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
பேயாழ்வார் 
மூன்றாம் திருவந்தாதி
2379 தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் 
அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக் 
கோள் முதலை துஞ்ச குறித்து எறிந்த சக்கரத்தான் 
தாள் முதலே நங்கட்குச் சார்வு             (99)

ஓம் நமோ நாராயணாய!

Monday, September 12, 2016

36. திவ்ய தேச தரிசன அனுபவம் 15 - திருக்கச்சி அத்திகிரி (74)

தரிசனம் செய்த நாள் - 02/09/2016 (வெள்ளிக்கிழமை)
 தொண்டைநாட்டுத் திருப்பதிகள் - 22
1. திருக்கச்சி - அத்திகிரி(74)
பொருளாசை மண்ணாசை பூங்குழலார் போகத்
திருளாசை சிந்தித் திராரே - அருளாளன்
கச்சித்  திருப்பதியா மத்தியூர்க் கண்ணன்றாள்
உச்சித் திருப்பதியா யென்று. (74)
- பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் '108 திருப்பதி அந்தாதி.'

(இந்தப் பதிவுக்கான தகவல்கள் பல வலைத்தளங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த வலைத்தளங்களை உருவாக்கியவர்களுக்கு என் நன்றி!)

'நகரேஷு காஞ்சி (நகரங்களில் சிறந்தது காஞ்சி)' என்பது மகாகவி காளிதாசனின் வாக்கு. காஞ்சிபுரம் என்றாலே வரதராஜப் பெருமாள்தான். ஆழ்வார்களின் பாடல்களில் 'கச்சி' என்ற பெயர் தனியே வந்தால், அது வரதராஜப் பெருமாள் கோயிலைக் குறிப்பதாகவே திவ்யப் பிரபந்தங்களுக்கு வியாக்கியானம் எழுதிய பெரியவாச்சான் பிள்ளை கருதியிருக்கிறார். பிரும்மாவின் யாகத்தின்போது ஹோமகுண்டத்திலிருந்து தோன்றியவர் வரதராஜப் பெருமாள். சம்ஸ்கிருதத்தில் 'க' என்றால்  பிரும்மா, 'அஞ்சி' என்றால் பூஜிக்கப்பட்டது. க + அஞ்சி - 'காஞ்சி.'

முக்தி தரும் ஏழு தலங்களில் காஞ்சியும் ஒன்று. இது விஷ்ணுவின் இடுப்புப் பகுதி என்று கருதப்படுகிறது. மற்ற ஆறு தலங்களும், அவை குறிக்கும் பகவானின் உடல் உறுப்புகளும் வருமாறு:
அவந்தி - பாதம்,
துவாரகை - தொப்புள்,
ஹரித்வார் - மார்பு,
மதுரா - கழுத்து,
காசி - மூக்கு,
அயோத்தி - தலை.

இந்த திவ்ய தேசத்துக்கு விஷ்ணு க்ஷேத்திரம், சத்யவ்ரத க்ஷேத்திரம், ஸ்ரீ சக்ர பீடம், விஷ்ணு சாலை, ஹரி க்ஷேத்திரம், புண்யகோடி க்ஷேத்திரம், வைகுண்ட க்ஷேத்திரம், ஹஸ்திஸைல க்ஷேத்திரம், திரிஸ்ரோத க்ஷேத்திரம், திருக்கச்சி, ஹஸ்திகிரி, அத்திகிரி என்ற பல பெயர்கள் உண்டு. தனக்குத் திருமஞ்சனக் கைங்கர்யம் செய்து வந்த ராமானுஜரை, ஆளவந்தாருக்குப்  பிறகு வைஷ்ணவ ஆச்சார்ய பீடத்துக்குத் தலைமை ஏற்க ஸ்ரீரங்கத்துக்கு வரதராஜப் பெருமாள் அனுப்பி வைத்ததால், இந்தக் கோயிலுக்குத் தியாக மண்டபம் என்ற பெயரும் உண்டு.

இந்தப் பெருமாளை கிருதயுகத்தில் பிரும்மாவும், த்ரேதா யுகத்தில் கஜேந்திரன் என்ற யானையும், துவாபர யுகத்தில் பிரஹஸ்பதியும், கலியுகத்தில் அனந்தனும் (ஆதிசேஷன்) வழிபட்டதாக ஐதீகம்.

ஒருமுறை பிரம்மாவிடம் கோபித்துக்கொண்டு, சரஸ்வதி அவருடைய சிருஷ்டி தண்டத்தைப் பறித்து விட்டார். அதனால் பிரம்மாவால் படைப்புத் தொழிலைச் செய்ய முடியவில்லை. அவர் விஷ்ணுவிடம் வேண்ட, விஷ்ணு அவரை 100 அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும் அல்லது காஞ்சிபுரத்தில் ஒரு அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும் (ஒன்றுக்கு நூறாகப் பலன் கொடுக்கும் இடம் காஞ்சி) என்று சொல்ல, பிரம்மாவும் அவ்வாறே காஞ்சியில் தவம் மேற்கொண்டார்.

பிரம்மாவின் தவத்தைக் கலைக்க சரஸ்வதி அரக்கர்களை அனுப்பினார். அரக்கர்களை விஷ்ணு அழித்தார். (இந்த வரலாறு காஞ்சியில் உள்ள திருவெ ஃகா, அஷ்டபுயங்கம், திருத்தண்கா, திருப்பவளவண்ணம் ஆகிய திவ்ய தேசங்களுடனும் தொடர்புடையது.) பிறகு, வேகவதி என்ற நதியாகப் பெருக்கெடுத்து வந்து யாகத்தைத் தடுக்க முயன்றார் சரஸ்வதி. அப்போது விஷ்ணு வேகவதி நதியின் குறுக்கே அணைபோல் படுத்துக்கொண்டு நதியைத் தடுக்க, தோல்வியடைந்த சரஸ்வதி, பூமிக்குள்  மறைந்தார்.

பிரம்மா யாகத்தை நிறைவு  செய்ததும், யாகத்தீயிலிருந்து தீப்பிழம்பாக வெளிப்பட்ட விஷ்ணு, பிரம்மாவுக்கு சிருஷ்டி தண்டத்தை அளித்தார். பிரம்மாவின் வேண்டுகோளின்படி யாகத்தீயில் தோன்றிய உருவத்துடன் வரதராஜன் என்ற பெயரில் புண்யகோடி விமானத்தின் கீழே கோயில் கொண்டார்.

தேவர்களின் குருவான பிரஹஸ்பதி இந்திரன் சாபத்தினால் மனிதனாகப் பிறந்து பல துயரங்களுக்கு ஆளானார். பரத்வாஜ முனிவரின் அறிவுரைப்படி இங்கே வந்து வரதரை  வழிபாட்டு, சாபவிமோசனம் பெற்றார். அதனால் இந்தக் கோயிலில் வழிபட்டால் ஜாதகத்தினால் ஏற்படும் குரு தோஷங்கள் விலகும் என்று நம்பப்படுகிறது.

தீர்த்த யாத்திரையின்போது, அர்ஜுனன் காஞ்சிக்கு வந்து வரதராஜரையும், அஷ்டபுஜங்கரையும் வணங்கியதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாணக்கியர், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், ஹர்ஷ சக்ரவர்த்தியால் நிறுவப்பட்ட நாலந்தா  பல்கலைக்கழகத்தின் முதல் தலைவரான தர்மபாலர் ஆகிய அறிஞர்களும் இங்கு வந்து வழிபட்டு ஞானம் பெற்றிருக்கின்றனர்.

பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார், திருக்கச்சி நம்பிகள், ராமானுஜர், கூரத்தாழ்வார், சிவபக்தரான அப்பய்ய தீக்ஷிதர், நடாதூர் அம்மாள், புரந்தரதாசர் போன்ற பல ஆன்மிகப் பெரியோர்களும் வரதனின் அருளைப்  பெற்றுள்ளனர். குலோத்துங்க சோழனால் கண்கள் பறிக்கப்பட்ட கூரத்தாழ்வார் தன் பார்வையைத் திரும்பப் பெற்றது வரதராஜனின் அருளால்தான்.

'கஞ்சி வரதப்பா, எங்கே வரதப்பா?' என்று இந்தக் கோயிலைத் தேட
வேண்டியதில்லை. சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு, வாலாஜாபாத் வழியாக வந்தால், காஞ்சிபுரத்துக்குள் நுழைந்தவுடனேயே, நமது இடது புறத்தில், இந்தக் கோயிலின் நீளமான மதில்களைப் பார்க்கலாம். ஸ்ரீபெரும்புதூர் வழியாக வந்தால் நகரின் மறு கோடியில்(பெரிய காஞ்சிபுரம் அல்லது சிவகாஞ்சி) நுழைந்து, இந்தக் கோடிக்கு (சின்ன காஞ்சிபுரம் அல்லது விஷ்ணு காஞ்சி) வர வேண்டும். பஸ் ஸ்டாண்டில் இருந்து ஷேர் ஆட்டோக்கள் உள்ளன.

20 ஏக்கர் பரப்பளவில், பல பிரகாரங்களைக் கொண்ட, விஸ்தாரமான கோயில் இது. மேற்கு கோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் இடதுபுறம் நூறு கால் மண்டபம். நான்
சென்றபோது மண்டபம் பூட்டப்பட்டிருந்தது. இதற்குள் பல அற்புதமான சிற்பங்கள் இருக்கின்றன. கண்ணாடியில் முகம் பார்க்கும் பெண், யாகம் செய்யும் விசுவாமித்திரர், சீதா கல்யாணம், வாலி வதம், அனுமான் சீதையிடம் கணையாழி கொடுத்தல், தசாவதாரக் காட்சிகள், அனுமான் சஞ்சீவி மலையைத் தூக்கி வருவது போன்ற சிற்பங்கள். மண்டபத்தின் நான்கு மூலைகளிலும் கருங்கல் சங்கிலிகள் தொங்குகின்றன. மண்டபத்துக்கு நடுவே உள்ள மேடையில் விசேஷ நாட்களில் உற்சவர் எழுந்தருள்வார்.

மண்டபத்துக்கு அருகே கோயில் திருக்குளம். இதன் பெயர் அனந்த சரஸ்.
ஆதிசேஷன் இதில் நீராடியதால் இதற்கு சேஷ தீர்த்தம் என்றும் பெயர். இந்தக் குளத்தின் நடுவில் உள்ள நீராழி மண்டபத்தின் அடியில் நீருக்குள் வெள்ளிப் பேழையில் அத்தி வரதரின் (அத்தி மரத்தாலான) விக்கிரகம் உள்ளது.

பிரும்மாவின் யாகத்தீயில் தோன்றியதால் அத்திவரதரின்  உடல் வெப்பத்தால் தகித்தது. தன்னைத் திருக்குளத்துக்குள் எழுந்தருளச் செய்யச் சொல்லி அர்ச்சகரின் கனவில் வந்து பெருமாள் சொன்னதால், அவ்வாறே அவர் எழுந்தருளப்பட்டார். பெருமாளின் ஆணைப்படி, பழைய சீவரம் என்ற ஊரில் (காஞ்சியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊர்) இதே போன்ற தோற்றம் உள்ள விக்கிரகம் எடுத்து வரப்பட்டு மூலவராக ஸ்தாபிக்கப்பட்டது.

மேலும், 40 வருடங்களுக்கு ஒருமுறை தன்னை வெளியே எடுத்து ஒரு மண்டலம் (45 நாட்கள்) பூஜிக்க வேண்டும் என்றும் பெருமாள் கூறியதாகவும் ஐதீகம். 1979ஆம் ஆண்டு அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டார். அப்போது அவரை தரிசிக்கும் பேறு  எனக்குக்  கிடைத்தது. மீண்டும் ஜூலை 2019இல், அத்திவரதர்  வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்.

தீயிலிருந்து வந்த பெருமாள் என்பதால் அவரைக் குளிர்விக்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு ஆலவட்ட கைங்கரியம் (விசிறி வீசுதல்) செய்து வந்தார் திருக்கச்சி நம்பிகள். இவர்  பூவிருந்தவல்லியில் (பூந்தமல்லி) நந்தவனம் அமைத்து, அங்கிருந்து பூக்களைப்  பறித்து மாலைகள் தொடுத்து தினமும் அங்கிருந்து காஞ்சிக்கு நடந்தே வந்து பெருமாளுக்கு மாலைகள் சாத்தி, ஆலவட்டக் கைங்கரியம் செய்து மகிழ்ந்தவர். வரதராஜப்   பெருமாளுடன் உரையாடும் பேறு பெற்றவர் இவர்.

ராமானுஜர் 6 கேள்விகளைத் திருக்கச்சி நம்பி மூலம் பெருமாளிடம் கேட்க, அவற்றுக்குப் பெருமாள் அளித்த பதில்கள்தான் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத் தத்துவத்துக்கு அடிப்படையாக அமைந்தன. 'ராமானுஜ தரிசனம்' என்று அழைக்கப்படும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் உருவானதில் வரதரின் பங்களிப்பும் உண்டு!

திருக்குளத்தின் மேற்கே வேணுகோபாலன், பூவராகன் சந்நிதிகள் உள்ளன. குளத்தின் வடக்குக் கரையில் ரங்கநாதர் சந்நிதி. கிழக்குக்  கரையில் சக்கரத்தாழ்வார் சந்நிதி. பொதுவாக எல்லா சக்கரத்தாழ்வார் சந்நிதிகளிலும்  இருப்பது போல ஒரு புறம் சக்கரத்தாழ்வார், மறுபுறம் நரசிம்மர் என்று இரண்டு மூர்த்திகள்.

திருக்குளத்தை தாண்டிப்போனால், வெளிப்பிரகாரம். இதன் பெயர் நம்மாழ்வார் வீதி. இந்தப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நம்மாழ்வார் சந்நிதி இருக்கிறது. இங்கே நம்மாழ்வாருடன், மதுரகவி ஆழ்வாரும், நாதமுனிகளும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

இதே பிரகாரத்தின் கிழக்குப் பகுதியில் ராமானுஜர், மணவாள  மாமுனிகள், திருக்கச்சி நம்பிகள் ஆகியோரின் சந்நிதிகள் இருக்கின்றன. ராமானுஜர் சந்நிதியில், முதலாழ்வார்கள் மூவர், திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய ஆழ்வார்களும், ஆளவந்தார், கூரத்தாழ்வார் ஆகிய ஆச்சார்யர்களும் சேவை சாதிக்கின்றனர்.

இந்தப்பிரகாரத்தின் முடிவில் கொடிமரத்துக்கு முன்பு  வேதாந்த தேசிகர் சந்நிதி இருக்கிறது.

கொடிமரத்தைக் கடந்து உள்ளே நுழைந்தால், இடதுபுறம் பெரிய மண்டபம். கோயில் முழுவதுமே பல மண்டபங்களும், சிற்பத்தூண்களும் இருப்பது சிறப்பு. இந்தப் பிரகாரத்தின் வடக்குப்புறத்தில் ராமர், அனந்தாழ்வார், கருமாணிக்கவரதர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன.  மேற்குப்பகுதியில் ஒரு பெரிய மண்டபம். அமைதியான இந்த மண்டபத்தில் அமர்ந்து இரண்டு மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தனர்!

மேற்குப்பக்கத்தில் மடைப்பள்ளி மட்டுமே. சந்நிதிகள் இல்லை. பிரகாரத்தின் முடிவில் கிழக்கு நோக்கியபடி பெருந்தேவித்தாயார் சந்நிதி. இந்தச் சந்நிதியின் விமானம் கல்யாணகோடி  விமானம் என்று அழைக்கப்படுகிறது. இரு கைகளில் தாமரை மலர்களை ஏந்தியபடி, அபய, வரத ஹஸ்தங்களுடன் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் அமர்ந்திருக்கிறார் தாயார்.

பிருகு முனிவர் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தின் பலனாக அவருக்கு மகளாக அவதரித்தார் மகாலக்ஷ்மி. பெருந்தேவி என்ற பெயர் கொண்ட அவர் பொற்றாமரை மலர்களால் வரதராஜரைப் பூஜித்து வந்தார். சிவபெருமான், பிரும்மா, மற்ற தேவர்கள், முனிவர்கள் முன்னிலையில், வரதராஜர் பெருந்தேவியை மணந்து கொண்டார் என்பது தல புராணம்.

பெருந்தேவித் தாயரைச் சேவித்து விட்டு, உள்ளே வந்தால், அடுத்த பிரகாரத்தில் நமக்கு நேரே (மேற்கே பார்த்தபடி) அழகியசிங்கர் சந்நிதி. அவரைச் சேவித்து விட்டுப் பிரகாரத்தில் வலம் வந்தால், சேனைமுதன்மையார் (விஷ்வக்சேனர்), ஆண்டாள், மலையாள நாச்சியார், தன்வந்திரி ஆகியோர்  சந்நிதிகள் , இந்தப் பிரகாரத்துக்கு சேனையர்கோன் திருமுற்றம் என்று பெயர். கிழக்குப் பிரகாரத்தின் இறுதியில் உள்ள மேடையின் மீது வலம்புரி விநாயகர் சந்நிதியும் உள்ளது. பிரகாரத்தின் கிழக்குப்புறம் பெருமாள் சந்நிதிக்கான நுழைவாயில்.

அத்திகிரி என்ற குன்றின் மீது அமைந்திருக்கிறது பெருமாள் சந்நிதி. 24 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். 24 படிகள் காயத்ரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகின்றன. புண்யகோடி விமானத்தின் கீழே அமைந்துள்ள கருவறையில் சேவை சாதிக்கிறார் வரதர். கிழக்கே நோக்கி நின்ற திருக்கோலம். அருகில் சென்று, பெருமாளின் திருமுகத்தைப் பார்க்கும்போது அந்த முகத்தில் பொங்கி வழியும் அருளை உணர முடிகிறது. இந்த அருளே இந்தப் பெருமாளுக்கு ஒரு தனி அழகைக் கொடுக்கிறது என்று சொல்லலாம். பார்த்துக்கொண்டு அங்கேயே நின்று விடலாம் என்று தோன்றியது. அர்ச்சகர் விரட்டியும் போக மனம் வரவில்லை. இவரைப் 'பேரருளாளன்' என்று சொல்வது மிகப் பொருத்தமானதுதான்.

மூலவருக்குப் பெயர் தேவராஜன். தேவப்பெருமாள், அத்தியூரான், அத்தியூர் வரதன், தேவாதிராஜன், பேரருளாளன், கஜேந்திர வரதன், மாணிக்க வரதன், பிரணாதார்த்திஹரன் என்ற பெயர்களும் உண்டு.

வரதராஜன் என்ற பெயர் உற்சவரைத்தான் குறிக்கும்.

வேதாந்த தேசிகர் எழுதிய 'அடைக்கலப்பத்து' என்ற நூலின் பாசுரங்களை வெள்ளித்தகடுகளில் பதித்து வரதராஜருக்கு மாலையாக அணிவித்துள்ளனர்.
வேங்கட கவி என்று  அழைக்கப்படும் வெங்கடாத்ரி என்ற பக்தர் பெருமாளுக்கும் உபய நாச்சியார்களுக்கும் மரகதக் கற்கள் பதித்த  தங்கக்  கொண்டையை அளித்து மகிழ்ந்திருக்கிறார்.

ஆற்காடு யுத்தத்தின் பொது நோய்வாய்ப்பட்டிருந்த ராபர்ட் கிளைவ் வரதராஜரின் துளஸித் தீர்த்தம் அருந்தியபின் நோயிலிருந்து குணமடைந்தார். போர் முடிந்ததும், இந்தக் கோயிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு விட்டு அவருக்கு  'மகர கண்டி' என்ற கழுத்தில் அணியும் ஒரு விலையுயர்ந்த ஆபரணத்தைக் காணிக்கையாக்கினார்.

இன்னொரு முறை, ஒரு பிரும்மோத்சவத்தின்போது, பெருமாளை தரிசித்த கிளைவ், பெருமாளின் தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்து தன் மனைவியின் சங்கிலியைப் பெருமாளுக்கு அளித்தார். கருடசேவையின்போது இந்தச் சங்கிலி பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

பிளேஸ் துரை  என்ற ஆங்கில அதிகாரி, தலையில் அணியும் தங்க ஆபரணத்தை வரதருக்குக் காணிக்கையாக்கி இருக்கிறார்.

இப்படித் தன்  அழகிய தோற்றத்தாலும், அருளாலும் பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்தவர் வரதர்,

தீயிலிருந்து தோன்றியவர் என்பதால் பெருமாளின் முகத்தில் வடுக்கள் ஏற்பட்டன. இந்த வடுக்களை உற்சவர் முகத்தில் காண முடியும் என்று சொல்கிறார்கள்.

ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் பிரம்மா இக்கோயிலுக்கு வந்து வரதராஜரை வழிபாட்டு விட்டுச் செல்வதாக நம்பப்படுகிறது. சித்ரா பௌர்ணமியை அடுத்த 14 நாட்களில், மாலைச் சூரியனின் கதிர்கள் பெருமாளின் காலடியில் விழுமாறு கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது.

அத்திகிரி வரதரின் திருவுருவம் 

பெருமாளை தரிசித்த பிறகு, பிரகாரத்தில் உள்ள தங்கப்பல்லியை தரிசிக்கும் வழக்கம் உள்ளது. முனி குமாரர்கள் இருவர் முனிவரின் சாபத்தினால் பல்லிகளாகி இந்தத் தலத்துக்கு வந்து தவம் செய்து சாபவிமோசனம் பெற்றதாக ஒரு வரலாறு உண்டு. அவர்களின் நினைவாக இந்திரன் தங்கத்தால் ஆன பல்லி  ஒன்றையும், வெள்ளியால் ஆன பல்லி  ஒன்றையும் இங்கே ஸ்தாபித்தான். ஆயினும் இப்போது தங்கப்பல்லி மட்டும்தான் உள்ளது. இதைத் தொட்டு வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. நம் தலைக்கு மேலே, உயரத்தில்  நிறுவப்பட்டுள்ள சுமார் 3 அடி நீளம் உள்ள தங்கப்பல்லியை, படிகளில் ஏறிக் கையால் அதன் உடல் முழுவதும் தொட்டு வணங்கும் பழக்கம் உள்ளது. 

இந்த திவ்ய தேசத்தை திருமங்கை ஆழ்வார் (4 பாசுரங்கள்), பூதத்தாழ்வார் (2 பாசுரங்கள்), பேயாழ்வார் (1 பாசுரம்) ஆகியோர் போற்றிப் பாடியிருக்கிறார்கள். (மொத்தம் 7 பாசுரங்கள்.)

வரதராஜர் மீது, திருக்கச்சி நம்பிகள் 'தேவராஜ அஷ்டகம்' என்ற ஸ்தோத்திரத்தையும், கூரத்தாழ்வார் 'வரதராஜஸ்தவம்' என்ற ஸ்தோத்திரத்தையும், வேதாந்த தேசிகர்  'வரதராஜ பஞ்சஸத்,' 'அர்த்த பஞ்சகம்,' 'மெய்விரத மான்மியம்,' 'திருச்சின்ன மாலை' ஆகிய ஸ்தோத்திரங்களையும், மணவாள  மாமுனிகள் 'தேவராஜ மங்களம்' என்ற ஸ்தோத்திரத்தையும் இயற்றியி ருக்கிறார்கள்.

தியாகைய்யரும், முத்துசாமி தீக்ஷிதரும் இந்தப் பெருமாள் மீது கீர்த்தனைகள் இயற்றியிருக்கிறார்கள். 

ஆழ்வார் பாசுரங்கள் இதோ.

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருநறையூர்:7
1540 கல் ஆர் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சி பாடகத்துள் 
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கைக்கோன் 
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு 
நல்லானுடைய நாமம் சொல்லில்-நமோ நாராயணமே             (4)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திருக்குறுந் தாண்டகம்
2049 பிண்டி ஆர் மண்டை ஏந்தி 
      பிறர் மனை திரிதந்து உண்ணும் 
முண்டியான் சாபம் தீர்த்த 
      ஒருவன் ஊர் உலகம் ஏத்தும் 
கண்டியூர் அரங்கம் மெய்யம் 
      கச்சி பேர் மல்லை என்று 
மண்டினார் உய்யல் அல்லால் 
      மற்றையார்க்கு உய்யல் ஆமே?            (19)

இரண்டாம் ஆயிரம் 
திருமங்கை ஆழ்வார் 
பெரிய திருமொழி 
திரு நெடுந்தாண்டகம்
2059 வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் 
      மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய் 
கொங்குத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன் 
      குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான் 
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் 
      பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா 
எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி 
      ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே             (9)

2065 கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய 
      களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும் 
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி 
      அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் 
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி 
      தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு 
மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே 
      மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே             (15)

மூன்றாம் ஆயிரம் 
இயற்பா 
பூதத்தாழ்வார் 
இரண்டாம் திருவந்தாதி
2275 என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை
வல் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும்
ஆழியான் அத்தியூரான்             (95)
 
2276 அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின்மேல் துயில்வான் முத்தீ
மறை ஆவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும்
இறை ஆவான் எங்கள் பிரான்             (96)